யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் சிலாபம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 05-03-2026
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம் அம்மா...
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய எங்கள் அன்னையே!
நின் திருமுகம் கண்டு ஆண்டு இரண்டு ஆனதோ!
மரணம் உங்களை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Our deepest condolences to auntie's family. RIP Kalaparan family