![](https://cdn.lankasririp.com/memorial/notice/224954/2bfe3155-d74f-431a-896c-95229162a52b/25-6798e5fd09fb4.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/224954/296fd5a9-6458-4240-a3b5-69b6fc9622aa/24-65dfd7103030c-md.webp)
திதி: 15-02-2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் சிலாபம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியயைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர
உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
Our deepest condolences to auntie's family. RIP Kalaparan family