Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAR 1937
இறப்பு 25 MAR 2012
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன்
வயது 75
அமரர் இராஜலட்சுமி நெல்லிநாதன் 1937 - 2012 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ், அராலி வடக்கு , வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கலிபோர்னியா, அமெரிக்காவை இறுதிக்கால வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  இராஜலட்சுமி நெல்லிநாதன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-04-2022

ஆருயிர் தாயே.....!!!

இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது எம் இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை எம் மனசு
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது அம்மா உம் நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்