Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUN 1962
இறப்பு 01 APR 2021
அமரர் இராஜகோபால் சின்னதம்பி
வயது 58
அமரர் இராஜகோபால் சின்னதம்பி 1962 - 2021 புத்தூர் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 10-04-2023

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபால் சின்னதம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதப்பா!

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா...

நீங்கள் இறைவனடி சேர்ந்து இரண்டு ஆண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 02 Apr, 2021
நன்றி நவிலல் Sat, 01 May, 2021