யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜதுரை வரதலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் இல்லம் விட்டு
பறந்து போனீர்கள் எங்கள் பாசப் பறவை அம்மா! படைத்தவன் மடி தேடி!
உயிர் தந்த உறவே!.
உங்கள் பெருமை ஒரு வரியில்
சொல்ல இயலுமோ!
எங்கள் கவியில் உங்களை வடிக்க
வார்த்தைகள் இல்லை எங்களிடம்!
காணிக்கை கேட்காத
தெய்வம் நீங்கள்
உங்கள் தோட்டத்தில் தான்
எத்தனை மலர்கள்?
எத்தனை நிறங்கள்?
எத்தனை குணங்கள்!
இன்று எங்களோடு நீங்கள்
இல்லாத உலகம் பகலில்
இரவு உங்கள் நினைவில்லாமல்
இதயம்
நின்று விடுமே அம்மா..
வந்த துன்பங்கள் யாவையும்
வரவாக வைத்துக் கொண்டு
இன்பங்கள் அனைத்தையும்
இரைத்தீர்கள்
எமக்குச் செலவாய்
சேமிப்பாய் உங்களிடம் இருந்தவை
செல்வங்கள் எம்மீது
நீங்கள் கொண்ட அன்பு ஒன்றே..
நீங்கள் சேர்ந்து விட்ட இடம் தெரியாமல்
சோர்ந்து விட்டதம்மா எங்கள் மனமும்
கண்களிலே அன்பு ஒன்றை மட்டுமே
கண்டோம் அம்மா உங்களிடத்தில்..
எம்மிடம் நீங்கள் காட்டிய அன்பின்
எல்லையைக் காணமுடியாமல் நாம் ....
எங்கிருந்து அம்மா மீண்டும்
எல்லையற்ற கடலாய்
அன்பை எடுத்தே தூவினீர்கள்
உங்கள் மருமக்கள், பேரக்குழந்தைகள் மீது..
இயற்கை என்பதே இறைவன் என்றால்
இறைவன் படைத்த பாத்திரங்களுள் அம்மா?
ஈடுசெய்ய யாருமில்லை
உங்கள் இணையற்ற பாசமிகு பாத்திரத்தை
தாயின் காலடியில் தான் எங்கள் சொர்க்கம்!!
எங்கள் உலகமே எங்கள் அம்மா
எங்களை விட்டு சென்று
இன்றுடன் ஓராண்டு ஆகியும் கூட
நேற்று வாழ்ந்தாற் போல்
நெஞ்சில் நினைவுகள்
நிழலாடுகின்றன இன்றும்….
தாயே சிற்பனை சாயியின்
பாதங்களில் உங்கள் ஆத்மா சாந்தியடை
இறைவனை இறைஞ்சுகின்றோம்..
எங்கள் தாயே கண்ணீர் பூக்களால்
ஆயிரம் கோடி அர்ச்சனைகள்!
ஏங்குகின்றோம் ஏதினில்
இனி
எமக்கு ஏற்றம் புரிய வைக்கயார் வருவார்.!
யார் வருவார்.!
உங்கள் பிரிவால் வாடும்.மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், தம்பி
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.