யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது வரும்
கண்ணீரை நாங்கள் துடைத்தாலும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது...
காலங்கள் பல கடந்தாலும்
கண்மணிகள் நாம்
கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறைவரம்
ஏதும் தாரோயோ அம்மா...
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
நீங்கள் விண்ணில்
கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள்
உங்களையே தேடுகின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
நந்தாவில் ஒழுங்கை,
தாவடி கிழக்கு.
Rest in peace Nithi family