யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழகத்தை வாழ்விடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த ரகுராம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இனி உன்னை எப்பிறவியில் காண்போம்
ரகுவே முதல் வந்தவர்கள் நாமிருக்க
கடைசியில் வந்து ஏன் அவசரப்பட்டு
முதலில் சென்றாய்?
ஓராண்டென்ன எத்தனை
எத்தனை ஆண்டானாலும்
மாண்டார் வருவாரோ என
மற்றவர் ஆறுதல் சொல்ல
பெற்றவள், கட்டியவள்,
உடன் பிறந்த எமதருமை
ரகுவே பிறந்து வாழ்ந்த நாடு
விட்டு கனடா தேசம் வந்திங்கு
உறவாகி உறவாடி பெயர் சொல்ல
வாழ்வாயென நாம் நினைத்திருந்த
வேளையில் கூப்பிடு தூரத்தில்
உனதருகில் இருந்தும் காப்பாற்ற
முடியாமல் போனது எப்படி விதியா?
இறைவனின் சதியா?
வரட்டு கௌரவமா?
ரகுவே உன்னை நினைக்கையில்
இதயம் பதறுகிறது ஆறுதில்லை
நீ மீண்டும் எங்கள் ரகுவாக
வருவாயென காத்திருப்போம்
என்றும் உன்னை காணத்தவிக்கும்
உறவுகள்.