Clicky

பிறப்பு 20 JAN 1972
இறப்பு 19 MAY 2024
திரு ராகுலன் ரட்ணராஜா 1972 - 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ragulan Ratnarajah
1972 - 2024

அன்பு நண்பா ரகு நாற்பதாண்டுக்கு முன் ஆரம்பித்த நம்நட்பு கடல் கடந்தும் தொடர்ந்து நாளடைவில் மிக நெருக்கமானது தினமும் பேசினோம் அடிக்கடி சந்தித்தோம் இனிமை ,எளிமை,பண்பு உன் அடையாளங்கள் காலையில் இடியாய் ஒரு செய்தி காற்றில் வந்து காதில் இறங்கியது இதயம் ஒருகணம் துடிக்க மறந்தது எந்த ரகு ? எங்கள் ரகுவா ? என்று பலமுறை எங்களுக்குள் ஆளுக்காள் கேட்டுத் தான் உறுதி செய்தோம் ஆனாலும் இன்றுவரை இது ஒரு செய்தியாய் தான் தோன்றுகிறது உண்மை என்று நம்ப மனம் மறுக்கிறது உனது குரலும் பரிசமும் இன்னும் உணர்கிறோம் நீ இனி இல்லை என்றுணர சில நாட்களோ வாரங்களோ இல்லை மாதங்களோ எடுக்கலாம் இறுதிவரை எம்முடன்-நல்ல தோழனாய் தோள்கோடுத்து உறுதியாய்ப் பயணிப்பாய் என்றெண்ணி இறுமாந்திருந்தோம் -ஆனால் அரைச் சதமடித்து ஈராண்டுகளே கடந்த நிலையில் இவ்வுலகை விட்டுச் சென்றதேனோ விதியே எம் நண்பனை ஏன் பறித்தாய் எம்மிடமிருந்து என்று விதியை வைய நமக்கு வலிமையில்லை விதி வலியது என்றுணர்ந்து வாழவேண்டியது தான் சென்றுவா தோழனே

Write Tribute