1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 OCT 1932
இறப்பு 26 JUL 2021
அமரர் பேரம்பலம் இராசம்மா
உரிமையாளர்- New Lalitha Jewellers, New Anantha Jewellers, New Archana Jewellers, Oviya Jewellers, Raasamma Banquet Hall
வயது 88
அமரர் பேரம்பலம் இராசம்மா 1932 - 2021 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் இராசம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-08-2022

வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்

அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!

ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!

கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos