

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியாவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று வந்தும்
ஆறமுடியவில்லையே!
உற்ற உடன்பிறப்பே
அன்பு நிறைந்த தங்கையே!
மணியாய் வந்துதித்த பாசமிகு அக்காவே!
ஆண்டு ஒன்று வந்தும் ஆறமுடியவில்லை
ஆசைமுகம் கண்ணில் வந்து தோன்றுதே!
விண்ணில் நீ விரைய விதி செய்த சதியால்
கண்ணில் நீர் சுமந்து கலங்கித் தவிக்கின்றோம்
பேரிடியாய் வந்தது உந்தன் பிரிவுச் செய்தி
ஆண்டுகள் நூறு வாழ்ந்திட வேண்டியவரே
விரைந்து நீ சென்று விட்ட மாயம் தான் என்னா?
ஓர் வயிற்றில் வந்துதித்து பாயில் படுத்துறங்கி
உண்டு மகிழ்ந்த பொழுதுகளை எப்படி மறப்போம்
நாளும் பொழுதும் தெய்வங்களை தொழுதிடுவீர்
ஊர் சென்று சந்தியாவளவில் சகோதரங்கள்
எல்லாம் கூடி மகிழ வேண்டும்,
இந்தியா சென்று சேது சிதம்பரம்,
சாயி தரிசனம் பெற்றிட வேண்டுமென்ற
பெரும் கனவோடு இருந்த உந்தனுக்கு
இன்று உந்தன் அஸ்தியை கொண்டு வந்து
நீ பெற்ற அருமைப்பிள்ளைகள், கணவர்,
உடன்பிறந்தோர் யாவரும் ஒன்றாக
இராமேஸ்வரம், காசி மாநகரில்
வந்துகூடி உன் கடமை செய்திட
வைத்து விட்டாயே
நீயிருந்து செய்த நெறிமுறைகள் அத்தனையும்
போயிருந்து எம்மனதை வாட்டுதே!
எமை பெற்று வளர்த்த தெய்வங்களாம்
அப்பா, அம்மாவோடு ஒன்றாய்க் கலந்துவிடு உறவே!
விண்ணுலகில் இருந்து பிள்ளைகள்
பேரப்பிள்ளைகளை ஆசீர்வதித்து கொண்டிருப்பாய்!
வாழுங்காலமெல்லாம் உன் நினைவுதான் எங்களுக்கு!
அனலை ஐயனார் திருவடிகளை ஆத்ம சாந்திக்காய்
வேண்டி துதிக்கின்றோம்
ஓம் சாந்தி!
அருமை உடன் பிறப்புகள்
கனடா, பிரான்ஸ்