1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1926
இறப்பு 27 SEP 2020
அமரர் புவனேஸ்வரி புஸ்பநாதன்
ஓய்வுபெற்ற உப அதிபர்
வயது 93
அமரர் புவனேஸ்வரி புஸ்பநாதன் 1926 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, யாழ். அரியாலை, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி புஸ்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
 
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள் அம்மா.

 அம்மா பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே!
மாணவரிடையே பிரசித்தம் பெற்ற ஆசிரியராக வலம்வந்தாய்!
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
என்ற குறளுக்கேட்ப ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றி வாழ்ந்தீர்கள்
அம்மா! 

ஆண்டொன்று கடந்தாலும் எம்மால் மீளமுடியவில்லை
உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உங்கள் அன்பான நினைவுகள், அறிவுரைகள், வழிகாட்டல்கள்
என்றும் எம்மை விட்டு அகலாது அம்மா!
எம் இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!  


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 29 Sep, 2020
நன்றி நவிலல் Mon, 26 Oct, 2020