Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 JUN 1942
மறைவு 11 MAR 2025
அமரர் புவனேஸ்வரி மார்கண்டன்
வயது 82
அமரர் புவனேஸ்வரி மார்கண்டன் 1942 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி மார்கண்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
ஆண்டு ஒன்று கடந்தது
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே! 

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்! 

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...    

தகவல்: குடும்பத்தினர்