Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 APR 1936
இறப்பு 16 MAY 2020
அமரர் புவனேஸ்வரி காராளசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- புனித லோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 84
அமரர் புவனேஸ்வரி காராளசிங்கம் 1936 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி காராளசிங்கம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அருமை மருமகளும்,

சின்னத்துரை காராளசிங்கம்(காவல்துறை- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சஞ்சீவ், பாரதி மதீஸ்வரன்(உரிமையாளர்- அலங்கார் டெக்கோர் நிறுவனம், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதீஸ்வரன் அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம், பாலஜேஸ்பதி, காலஞ்சென்ற பாலேந்திரன், பாலசண்டேஸ்வரி, பாலசண்டேஸ்வரன், பாலசுந்தரம், ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சச்சின் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

கோகுல், தேஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 15 Jun, 2020