

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நெல்லிநாதன் அவர்கள் 26-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நெல்லிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செல்வநாதன், மதுரநாதன் றகுநாதன், கேதாரநாதன், திருமகள், நாமகள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தனபாலசிங்கம், லோகேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராகினி, தர்மமலர், சோதிமலர், ஜெயசிறி மோகன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், தனபாலசிங்கம், செல்லம்மா, சரவணமுத்து, வன்னியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோசன், நிகேதன், ஜனகன், மயூரவாணி, வினோஜா, விதுசன், கௌத்தம், சங்கவி, யாகவன், கீர்த்தி, அனோஜன், சுவேதா ஆகியோரின் அன்பு அப்பம்மா அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-08-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நுணாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.