8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி செல்வராசா
K K S சிமெண்ட் தொழிற்சாலை- முகவர்
வயது 80
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி செல்வராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்!
நிலவை சூரியனை
ஒளிர்கின்ற தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்