அமரர் புஷ்பவதி முத்துக்குமார்
(சேவியர் ரீச்சர், தமிழ்ப் பட்டதாரி ஆசிரியை)
வயது 65
அமரர் புஷ்பவதி முத்துக்குமார்
1947 -
2013
துணுக்காய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அம்மம்மாவுக்கு…
Late Puspavathy Muthukumar
துணுக்காய், Sri Lanka
அன்புடைய ஜேர்மனி அம்மம்மாவுக்கு, எங்களை விட்டு பிரிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது என்று எண்ணும்போது எங்களால் நம்பவே முடியாமல் இருக்கின்றது. பத்து வருடம் ஆகிவிட்டாலும் எங்கள் மனதில் என்றும் நிறைந்திருப்பீர்கள். 2011ம் ஆண்டில், அம்மா அப்பா இலங்கைக்கு சென்ற பொழுது, ஒரு தாய் போல் இருவரை வளர்த்ததை நாம் என்றும் மறவோம். எங்களுக்கு தமிழ் மீது ஊக்கத்தையும் ஆசையும் வளர்த்தவர் நீங்கள் ஒருவர் தான் அம்மம்மா! வெளியில் மழை பெய்தாலும், வெயில் எரித்தாலும், காற்று அடித்தாலும் தமிழை எமக்கு எங்கள் தோட்டத்தில் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பை விடமாட்டீர்கள் கருனையின் வடிவம், ஒற்றுமையின் ஓவியம் நீங்கள்தான் அம்மம்மா! மேலே இருந்து எங்களை எப்பொழுதும் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
Write Tribute