கண்டி இலங்கையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி யாழ்ப்பாணம், Neuilly sur Marne - France ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியேட்டி நிகழ்வு 14-12-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் Association Notre Dame de l’Espérance 6-10 rue de la Fosse aux Bergers, 93250 Villemomble எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
I know you must be feeling a lot of pain right now, but I want you to know that God is always with you and you are also in our prayers. Receive my deepest condolences