Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 21 JUN 1990
விண்ணில் 27 DEC 2017
அமரர் புஷ்பராஜா பிரதீப்
வயது 27
அமரர் புஷ்பராஜா பிரதீப் 1990 - 2017 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Brétigny-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பராஜா பிரதீப் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
பாதிவழி உன்னை கூட்டிச்சென்றதேனோ!!

கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!

வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!

தேம்பியழுகின்றோம் துணையாருமின்றி
உன் மணக்கோலம் காணத்துடித்தோம்
நீயோ பூக்கோலம் கொண்டு
மறைந்த மாயம் என்னவோ!!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices