Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 OCT 1956
இறப்பு 09 MAY 2022
அமரர் புஸ்பராஜ் வசீகரன் 1956 - 2022 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , சுவிஸ் Geneva, கனடா Montreal, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராஜ் வசீகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

வசீகரன் என்ற பெயருக்கு ஏற்ப
வசீகரமான புன்னகை வதனம்

செம்மண் உரும்பை நகரில்
பொன்வண்ணச் செம்மலாய்
கண் மலர்ந்த காவியன்
என் அன்பு மணாளன்

விடலைப் பருவத்திலேயே
 நாடு விட்டு இடம் பெயர்ந்து
கனடிய மண்ணில் கால் பதித்து
 குடும்ப வளர்ச்சிக்கு தன்னை
தியாகம் செய்த குலவிளக்கு

மணி மணியாக மழலை செல்வங்களை
 பெற்று குலம் விளங்கவைத்தவன்

காலன் விரித்த வலையில் கால் தடுமாறி
 விழுந்து கண்களை மூடிக்கொண்டான்

அந்த நாள் எம் சிந்தையை விட்டு விலகாமல்
இந்த நாளிலும் கண்ணீர் சிந்தவைக்கிறது 

கண்கள் இமைக்க மறந்து இதயம் 

என் அன்பின் வசீ 11/11/1987 முதல்
 என் இதயத்தில் உன் இதயநாதம்
 இசைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த ஓசை என்றும் ஓயாது.
நான் உன்னை சொர்கத்தில் காணும்வரை. சகிலா

  My father was a devoted and loving man.
He served selflessly and humbly.
 Though he faced many trials, he never failed to make me smile.

I am beyond grateful for the life he provided me
and the meaningful lessons he taught me.

He had a joyful presence and made friends wherever he went.
The way he lived his life led me to love others unconditionally,
and I am forever thankful for him.

We miss him terribly and will live fruitfully to honour him. 

ஆமென், கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கே மகிமை உண்டாவதாக, அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமை என்று அல்லது மறைவான ஒரு காரியத்தை இந்த வசனத்தின் நிமித்தம் சொல்லுகிறார், அவர் நிலத்தில் விதைக்கின்ற விதையை குறித்து மறைபொருளாய் சொல்லுகிறார் , கோதுமை விதையானது உயிருடன் இருக்கும் போது ஒரு நாளும் பலன் தருவதில்லை, இன்னும் நாங்கள் 100% வீதம் கோதுமையை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதை நாங்கள் நிலத்தில் பயிரிட வேண்டும், ஒரு கோதுமை விதையை விதைத்தால் அந்த கோதுமை கதிரில் எத்தனை கோதுமை மனிகள் காணப்படும் அது போல தான் மனித வாழ்கையில் இயேசு மரித்ததின் நிமித்தம் அவர் இரத்தம் சிந்தினதின் நிமித்தம் அநேகர் இரட்சிப்பை பெற்றார்கள் விடுதலை பெற்றார்கள், அது போல நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும் எங்கள் உறவுகள் மரிப்பதின் நிமித்தம், அந்த மனித விதை விதைக்கப்படுவதின் நிமித்தம் அன்பு , உறவு ஜக்கியம் பாசம் இல்லாமல் வாழ்ந்தவர்கள் அவரின் மரணித்தின் நிமித்தம் அன்பு பாசம் உறவு ஜக்கியம் யாவற்றையும் தேடுகிறோம் இருக்கும் போது வராத உணர்வு ஒருவர் மரித்ததும் இரட்சிப்பு (ஓர் மாற்றம்) கடந்து வருகிறது, அதுவே பலன் கொடுக்கிறது.

தகவல்: சகிலா

தொடர்புகளுக்கு

Shakila - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்