பத்துத்திங்கள் தாய் கருவறையில் சுமந்தாள் பலதையும் கற்பித்து அரியாசனம் காணச்செய்தாள் அதுபோல் எந்தன் ஆருயிர் அன்னையிவர் அன்போடு அரவணைத்து தாலாட்டிடும் கடவுளவர் உயிர்த் துளியாய் துளி வானொலி உயிர்த்தெழு தமிழால் என்று முழக்கியவர் இன்னிசை பா இசைத்த தாயவர் இனிமைத் தரும் குரலாலே சாய்த்தவர் தனித்துவம் கொண்டே தமிழை காத்தவர் தங்கத் தாயாய் எங்கள் பவியம்மா உங்கள் குரல் ஓய்ந்தது ஏனோ உயிர்த்தெழு வரமாட்டீரோ கதறல் கேட்கவில்லையோ தமிழ் காத்த என் தாயே தனித்தமிழ் தேடி நுகர்ந்த தேனமுதே அன்போடு அரவணைத்து அகம் மகிழ அறியாததை அறிந்திட உதவிய மேதையே இசை எனும் மருந்தை தந்தவரே இன்று மெளனம் காப்பது சரியா மீண்டும் உன்முகம் காண்பேன் தாயே மீளாத துயரை தந்துவிட்டு சென்றுவிட்டீரே உங்கள் பிள்ளைகள் கதறுவது கேட்கவில்லையா? உயிரை உலுக்கி அழைக்கிறோம் அம்மா விண்ணில் சென்று புன்னகைப்பது தகுமா? விடையறியா தேடலில் கிடைத்த பொக்கிஷம் கரும்பாய் இனித்து மருந்தென தருவீர் கண்கொள்ளா இசையோடு பாடலையும் நீரே மணமுற்ற மலர் இன்று நெடிதுயிலில் மனமோ உயிரற்ற உடலோடு கதறுகிறது பவி அம்மா மீண்டும் அழைகிறேன் எழுந்து வாருங்கள் பிள்ளைகளை அரவணையுங்கள் எம்.லீலா வினோதினி அரனாயக இலங்கை
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.🙏