பவி அம்மா இன்னுயிர் ஈடேற்றம் அடையட்டும் ....................... பவி அம்மா முன்பு நேரலையில் நீயிருப்பாய் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயர் அலையில் நாங்கள் நிற்கிறோம் இதயம் முழுக்க அன்பைத் தானே வைத்திருந்தாய் அதனுள் வைத்திருக்கும் வலியை. ஏன் சொல்லமறந்தாய் மீளா உறக்கத்தில் நீ... மீளமுடியாத துயரத்தில் நாங்கள் தமிழுக்குத் தானே குரல் கொடுத்தாய் எவன் உன் உயிரெடுத்தான் வெண்கல குரலில் பண்ணிசை பாடுவாய் அந்த மெல்லிசையை இனி யார் பாடுவார் செவ்வாய் தோறும் செம்மொழி தமிழை சூடினாய் வியாழன் தோறும் தமிழின் புகழ் பாடினாய் பழமையில் எத்தனை இனிமையில் சொல்லித் தானே விடைப் பெறுவாய் இப்போது மட்டும் ஏனம்மா சொல்லாமல் விடைப் பெற்றாய் துளி வானொலி நிகழ்வோடு எப்போதும் இணைந்திருப்பதாய் இப்போது மட்டும் ஏனம்மா மறைந்து நிற்கிறாய் என்னை துளி வானொலியில் தூண் என்றாய் துளி வானொலியின் அரண் எப்போதும் நீத்தானமா கண்ணீரீல் துளிகள் இல்லை குருதியாய் கொட்டுகிறது உங்கள் தமிழின் நயவன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமிதம் உங்கள் சொற்கள் எங்களுக்கு தமிழமுதம் சரியான கருத்துகளை தீயாய் படிப்பாய் பவி அம்மா உங்கள் உயிரை எப்படி விட்டாய் உங்கள் பதிவுகள் எங்களுக்கு விதைகள் உங்கள் பாடல்கள் எங்களுக்கு தேடல்கள் நிலாமாவிடம் கற்றுக் கொள்கிறேன் முழக்கமிடுவாய் நீயில்லாமல் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை கூறிக்கொண்டே திறிகிறோம் உம்மை நினைத்து துளி வானொலியில் தமிழுக்கான தடம் பதித்தாய் தனியாக ஓரிடத்தை யாரிடமும் சொல்லாமல் எப்படி பிடித்தாய் அந்த இடத்தில் எங்களுக்கும் பங்குகொடு நாளை நாமும் வருவோம் தமிழன்னையை போற்றி பாடலாம் தமிழை எப்போதும் வாழ்த்திப் பாடலாம் பவி அம்மா உங்களிடம் நேரலையில் சொன்னதுதான் பவி அம்மா எங்களை காக்கும் புவி அம்மா சிறந்த பாவலர் என்றீர்கள் இந்த பாக்கள் காற்றில் கலந்து காதோரம் வரும் கேளம்மா கண்ணீரில் தவிக்கிறோம் கண் திறந்து பாரம்மா ஆழ்ந்த வருத்தங்களுடன் துளியரசன்செண்பகம்
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.🙏