


பாக்களம் பாடவந்தேன் பவியம்மா அவர்களுக்கு பாமாலை சூடி படித்துக் காட்டவா பூமாலை சூடி என்புலம்பலை சொல்லவா வார்த்தையில் வர்ணிக்க மனம்நோவுது வாசிக்க நினைத்தால் வாயும் கூசுது எண்ணத்தைச் சொல்ல இயலாத கோழை அறிவில் சிறந்த படிக்கமுடியா பேதை இயற்கை நியதி இப்படி ஆகுமென்றால் மானிடத்தின் துயரமும் மாறாத ஒன்றே தாயாய் இருந்து வளர்த்த தமிழும் தன்னலம் காத்ததோ சேயாய் பாவிக்க இரக்கமும் இல்லையோ மூப்பும் மூச்சும் முடிந்தவரை போராடி இறுதி வெற்றி எமனுக்கே என்றால் ஏக்கமும் கண்ணீரும் என்றைக்கும் நிலைக்குமே நிலையான சொர்க்கம் நிற்பதும் இல்லை அதுவே நிம்மதி தருவதுமில்லை இன்பமும் துன்பமும் இரட்டை பக்கங்கள் ஒருபுறமாக உலவவும் முடியல உண்மையில் இயற்கையை ஏற்கவும் தெரியல எப்படி வந்தோமோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் இறைவன் இடைப்பட்ட காலத்தில் ஆட்டுவிக்கும் அற்புதம் அண்டத்தைப் பிளக்கும் வெடியாக அனைத்தையும் சாப்பிடும் நெருப்பாக இதயத்தை நோகடிக்கும் நோயாக கூனிக்குறுக வைக்கும் நடைபிணமாக்கும் நாசவேலையை எதிரிக்கும் தரவேண்டாமென்ற விண்ணப்பத்தை எல்லோருக்கும் சேர்த்து பவியம்மா கணக்கில் பதிவு செய்கிறேன் அன்றும் இன்றும் என்றும் இறைசக்தி ஈடுஇணையற்றது எல்லாமே அவனிடம் சமர்ப்பிப்போம் இயன்றவரை இன்பம் பெற இவ்வுலகில் தர்மம் சத்தியம் நிலைக்க அன்பே சிவமாக மனிதர்களை ஆட்கொள்ள வேண்டி அமைதியின் சொருபம் அம்மாவை வழிபட்டு விடைகொடுப்போமாக மீனாட்சி..
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?