


தாயே தனித்தமிழே நீயுறங்கு., நெஞ்சம் கனகனத்து விம்மி துடிக்கிறது அஞ்சுதல் யாவர்க்கும் தமிழர்க்கு இல்லை கொஞ்சம் இளைப்பாறு கள்ளக்காலன் மிதிப்பட விஞ்ச வருகிறோம் வெற்றித் தமிழ்படையோடு., துளியகத்தின் தோட்டக்கள் தனித்தமிழ் ஊற்றுக்கண் களிப்பெய்தி நின்றேன் கலிப்பெய்த வைத்தாயே தாளிப்பனை போலே தழைக்கும் தனித்தமிழை தூளிகொண்டு துடிப்பேத்திய துளிவானொலி தாயம்மாவே; மீண்டும் தாயகம் மீள வேண்டி யாண்டும் தவமிருந்த செந்தமிழ் நாயகியே பூண்டிய புதுக்கோலம் புறப்பட்டாய் என்னம்மா? மாண்டது பூவுடல் மறத்தமிழர் அழிவரோ?! பவியம்மா பவியம்மா செவிமடுத்த செய்திகள் கவியோடையாக காதோடு சென்றவன் யானே மேவிடும் தனித்தமிழை மேனிதியில் விதைத்தவர் ஆவி போனாலென்ன அன்னைத்தமிழோடு நீயிருக்க., நிலவொன்று கரைபடிந்தால் நிலமெல்லாம் குளிராகுமா? கலக்கமெல்லாம் கண்ணீரோடு கரைபுரண்டு ஓடட்டும் விலக்கம் மட்டும் விழியோடுதானே போகும் துலங்கட்டும் தூயதமிழ் துணையோடு பவியம்மா., இருக்கட்டும் இறைவனென்று இடித்துத் தள்ளவே சுருக்கெழுத்து போட்டவனை சூரையாட வேண்டும் நறுக்கென்று கேள்விகள் யாவரும் கேட்போம் நறுந்தமிழ் ஊட்டிய நாயகிபவியைக் கொடுயென்று., நிலவம்மா இருந்ததெல்லாம் நேற்றோடு போயாச்சி பவியம்மா தமிழம்மா பழந்தமிழர்க்கு தாயம்மா நனிமிகு தமிழோடு கலந்தாளே யாவர்க்கும்தாய்தானே தனியொரு மாந்தனுக்கும் தாயானாள் இன்றென்றும்., சக்தி.செல்வகுமாரவேல் பண்ணுருட்டி 9442361636/9942186212
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?