உயிரோட்டம் ஆக்குவோம் தமிழையும் என்றநின் உயிரோட்டம் நின்றானதேன்? பயிராட்டம் நின்றதால் பருவமும் இழந்தது வான்மழை என்றானதோ? தமிழுக்குள் தவளையாய்த் தத்திய பிறமொழிக் கலப்பினை வடிகட்டினாய். சிக்கிய சேரினுள் முக்கிய கருடனின் தனித்தமிழாலே வெளியேற்றினாய். அன்னையாய் ஆனதால் கன்னியவள் தமிழ்மகள் உன்மடியில் விளையாடினாள். மடிதுயில் தமிழர்களின் மனம்போகும் பாதையால் அல்லாவோ நெடிதுயிலில் நீயாகினாய். தமிழோடு விளையாடும் தளிரிசைத் தென்றலின் இனிமையை விளைவாக்கினாய். பழமையிற் இனித்திருந்த திரையிசைப் பாடல்களை விரும்பிடத் தெரிவாக்கினாய். தமிழுக்கும் உயிருண்டு தரணியில் பேருண்டு தினம்தோறும் தெளிவாக்கினாய். தேடிநுகர் வண்டுகளாய்க் கூடிவந்த உறவுகளின் தமிழிலே தரமேற்றினாய். நாடியை அறிவதென நாழிகை உரையிலே தனித்தமிழ் பறைசாற்றினாய். அறியாத உறவுகளின் குறைகளைக் குறிப்பதில் குணவதி நீ ஏறினாய். விலகிய நாட்களில் விலையற்ற உன்குரலின் பின்னனி அலையாகிடும். அலைகின்ற உள்ளங்கள் அருமைதிரு உணர்வேற்று அமைதிக்கு அரும்பாகிடும். விரும்பிய கரும்பென அருந்திய நிகழ்வுகள் மருந்தென மனம்காத்தே. மயக்குரும் மாயையாய் மணமுற்ற மலரினை மறைவாக்கிய மர்மமென்ன?
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.🙏