


என்ன அவசரம் அன்ரி உங்களுக்கு. எம்மையெல்லாம் தவிக்கவிட்டு விட்டு எப்படிப் போனீர்கள். எப்பொழுது கதைத்தாலும் எப்போ வரப்போகிறாயம்மா என்றுதானே கேட்பீர்கள். கெதியாய் வந்துபோ என்று கூப்பிடுவீர்களே அன்ரி. அப்போவெல்லாம் எனக்குத் தெரியாதே இப்படி நடக்குமென்று. எப்பொழுதுமே சிரித்த முகமாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவுமே கதைப்பீர்களே. எனக்கு நீங்கள் இன்னுமொரு அம்மாவாக இருந்தீர்களே அன்ரி. பிரான்ஸ் வந்தாலே அன்ரி தானே ஞாபகம் வருவீர்கள். இனி என்ன செய்வேன். நீங்கள் எம்மை விட்டுப் போய் விட்டீர்கள் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே. என்ன செய்யப் போகிறோம்? எப்படி வந்து உங்கள் முகத்தைப் பார்க்கப் போகிறேனோ? என் தங்கைகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவேனோ? அந்தத் தைரியத்தையும் நீங்களே கடவுளாக இருந்து எனக்குத் தாருங்கள் அன்ரி.
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?