



நாங்கள் பகிரும் பாக்களை இன்முகம் மாறாமல் வாசிக்கும் அன்பு அன்னையே.... இன்று உமக்கு இரங்கற் பாவை நான் எவ்வாறு எழுதவேன்.... உடலும், உயிரும் நடுங்க.... கைகளால் அல்ல கண்ணீரால் எழுதுகிறேன்.. ??? அதிராத பேச்சினால் அத்தனை உள்ளங்களிலும் நிறைந்த தாயே... அதிர்ந்து தான் போனோம் நீங்கள் எங்களை பிரிந்து போன துயரச்செய்தி கேட்டு... உடைந்து அழும் எம் உயிர் தோழியே... உன் கண்ணீர் துடைக்க, ஆறுதல் கூறவும் கூட அருகில் நானில்லையே..?? என எண்ணி கடல் கடந்து கண்ணீர் விடுகிறோம்.... இங்கு செய்வதறியாது தடுமாறி நிற்கிறோம்.. காலனின் கட்டளையில் அமைதியாய் போனதோ உங்களின் சிரித்த முகம்... உங்களின் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!!!?????? ஓம் சாந்தி!!!?????? ஓம் சாந்தி!!!??????
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?