Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1950
இறப்பு 02 AUG 2026
திருமதி புஷ்பகாந்தி சிவலிங்கம்
வயது 75
திருமதி புஷ்பகாந்தி சிவலிங்கம் 1950 - 2026 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை Shoe Road ஐ வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை கோடம்பாக்கத்தை தற்போதையை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தி சிவலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அருமை புதல்வியும், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்லையா நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(சண்முகலிங்கம் - முன்னாள் உரிமையாளர் அம்பிகைகுமரன் ஸ்ரோஸ், கொழும்பு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருலிங்கம்(ராஜன் - லண்டன்), சந்திரிக்கா(சாந்தி - இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா அவர்களின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி(தேவி - லண்டன்), சத்தியலட்சுமி(ராசா-அவுஸ்திரேலியா), தடாதகை(பரமேஸ்-யாழ்ப்பாணம்), வரதலட்சுமி (லண்டன்), காலஞ்சென்ற அம்பிகைகுமரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி(கொழும்பு), சாரதாம்பாள்(கனடா), சிவபாதம்(லண்டன்) மற்றும் சண்முகவடிவு(கொழும்பு) இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(கொழும்பு), பாலச்சந்திரன்(முன்னாள் கலைப்பீடாதிபதி,யாழ்பாண பல்கலைக்கழகம்) மற்றும் கார்த்திகேசு(யாழ்ப்பாணம்), திருவிளங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான S.K.செல்லையா(கொழும்பு), நுட்பநாதன்(கொழும்பு) மற்றும் கமலாசினி(லண்டன்), காலஞ்சென்றவர்களான தியாகராஜா(கொழும்பு), இராமலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

அக்‌ஷரன்(லண்டன்), ஹிரித்திசன்(லண்டன்), ஜெஷ்விகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2026 வியாழக்கிழமை அன்று 10.30 மணியில் இருந்து 12.30 மணி வரை நெ. 1 ஜோன்ஸ் ரோடு, மேற்கு சைதாப்பேட்டை, விநாயகபுரம், சென்னை - 600015-ல், அமைந்துள்ள FLYING SQUAD ஹாலில் நடைபெற்று அதை தொடர்ந்து 1 மணி முதல் பிருந்தாவன் நகர், வளசரவாக்கம், சென்னை - 600087-ல் அமைந்துள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
சியாமளா - மருமகள்
சுரேஷ் - பெறாமகன்

Photos

Notices