1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புனிதராசா குகதீபன்
1983 -
2020
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை மானாங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புனிதராசா குகதீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உன் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாமல் சென்றுவிட்டாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்