மன்னாரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் டெய்சி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஈஸ்வரானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விக்கினராஜா(விக்கி), தயாளினி(தயா- ஐக்கிய அமெரிக்கா) மகிந்தன்(பனை அபிவிருத்திச் சபை, யாழ்ப்பாணம்), மகேந்திரன்(கண்ணா- கொமேர்ஷல் வங்கி, யாழ்ப்பாணம்), ஜனகன்(ஜனா- பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), ஹம்சா(நெல்லியடி மத்திய கல்லூரி), ஜமுனா(வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சிகா, கம்சிகா, கஜானி, அபிநயா, கேசரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நாவலர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மகிழ்ச்சியான புன்னகை அன்பு நிறைந்த உபசரிப்பு ஆத்மார்த்தமான உரையாடல் எம் நினைவிற்குள் எப்போதும் நிறைந்து நிற்கும் Aunty உங்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் குணசிங்கம் குடும்பம்