

எங்கள் இதயம் நிறைந்த அக்கா தாங்கள் அரன் அடிஅடைந்து விட்டீர்கள் எனற செய்தியை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நீங்கள் எங்கள் நெஞ்சங்களில் என்றும் பசுமையாக வாழ்த்து கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சிரித்த முகம், அழகியவதனம், கனிவான பேச்சு,.அனைவரையும் அரவணைக்கும் பண்பு இவை எல்லாவற்றையும் மறந்துவிட முடியுமா. தாங்கள் வாழும் போதே சரியைத்.தொண்டின் மூலம் இறைவனோடு ஐக்கியமாகி வாழ்த்து வந்தீர்கள். உங்கள் கடமைகள் அனைத்தையும் குறைவின்றி நிறைவு செய்தீர்கள். உங்கள் பயணம் போதும் எனக்கருதிய இறைவன் தமது சேவைக்கென பூவோடும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாக வாவென அழைத்துக் கொண்டான். அதுதான் உண்மை. இறப்பைக்கூடி மானசீகமாக சந்தோசமாக ஏற்றுக் கொண்டீர்கள். பிறவா பேரின்ப நிலை பெற்ற மகராசி நீங்கள். தங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளின் கீழ் நிரந்தர அமைதி பெற இறைவன் திருவடிகளை இறைஞ்சுகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

ஆழ்ந்த இரங்கல்.