யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
ஓர் திங்கள் ஆனதுவோ கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா, நோக்கும் இடமெல்லாம் உங்கள் முகம் தெரிகிறது
கேட்கும் ஒலிகளில் எல்லாம் உங்கள் குரல் அழைக்கிறது
அசையும் காற்றிலும் கூட உங்கள் கைகள் அணைக்கிறது
ஒவ்வொரு கணங்களிலும் உங்கள் அருமையை உணர்கிறோம்
அன்பு கொட்டி பாசத்தை பொழிந்து
பண்பை உணர்த்தி கருணைக்கடலாய்
வாழ்ந்து காட்டினீர்கள்
ஒருமாதம் ஆனல் என்ன யுகங்கள்
பல கழிந்தால்
என்ன
எங்கள் இதயங்களில்
உங்களை
இருத்தி பூஜிக்கிறோம்.
எங்கள் குடும்பத்தலைவர் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அன்புக்குரியவரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-11-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Canada Kanthaswamy Temple Society, 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies to his wife, children and all the siblings. Our Prayers and thoughts are with you all. Is a great loss to the family. May his soul rest in Peace.