Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 MAY 1971
இறப்பு 16 OCT 2022
அமரர் பிறேமச்சந்திரன் கந்தையா
Mountain Financial Group உரிமையாளர்
வயது 51
அமரர் பிறேமச்சந்திரன் கந்தையா 1971 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேமச்சந்திரன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மலர்ந்த முகமும் சிரித்த செவ்வாயும்
நிமிர்ந்த நடையும் படர்ந்த தோள்களும்
 கனிந்த சொல்லும் கலங்காத நெஞ்சமும்
எல்லாம் கொடுத்துப் படைத்த இறைவன்
உங்களைப் பாதியில் பறித்து ஒரு வருடமாகிறது!

பாசத்தைக் கொட்டி, பண்பினைக்காட்டி
நேசத்துடன் அள்ளி அணைத்து
நீங்கள் கொட்டிய அன்பு நெஞ்சில் நிறைந்து நிற்கிறது!

நீங்கள் இல்லாத ஒவ்வொரு கணமும் ஒரு யுகங்கள்
இருப்பினும் நோக்கும் இடமெல்லாம் நிறைந்து நிற்கிறீர்கள்
கேட்கும் ஒலிகளில் எல்லாம் உங்கள் குரல் கேட்கிறது
கனவிலும் நனவிலும் உங்களைக் காண்கிறோம்
என்றும் எங்கள் இதயங்களில் உங்களை ஆராதிக்கிறோம்...

தகவல்: குடும்பத்தினர்