1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொடிகாமம் பெரிய நாவல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீப் தணிகாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீ
மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டாயோ?
எங்கள் கண்ணிலே வழியும் நீரை
உன் கடைக் கண்ணால் பாரும்!
உமை நினைத்தே உருகுகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,
கருமுகிலும்
இவ்வுலகில்
போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம்
கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில்
வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உம் நினைவுகளெல்லாம்
எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உம்மை கரங்கள் கூப்பி...
தகவல்:
குடும்பத்தினர்