
யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு வெள்ளிருவையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow E17 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரதாப் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-09-2025
எங்களை விட்டு நீ பிரிந்து
ஓராண்டு ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
Pira and I worked together very well and closely for around a year. We shared many stories and personal information, he took care of me from far which I always appreciated but never mentioned. When...