யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur(GR), Flums(SG) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதாப் பிரபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அப்பா...
உங்கள் கையை பிடித்து
நடந்த நாட்கள் மறக்கவில்லை,
உங்கள் வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கின்றன,
நீங்கள் இல்லாத வெறுமை தினமும் வாட்டினாலும்,
உங்கள் நினைவுகள் என் வாழ்வை வழிநடத்துகின்றன.
உங்கள் தோளில் சாய்ந்து நடந்த
நாட்கள் இன்று நினைவுகளாகிவிட்டன,
உங்கள் அன்பான வார்த்தைகள் இன்னும்
என் மனதில் ஒலிக்கின்றன,
நீங்கள் இல்லாத வெறுமை வலித்தாலும்,
உங்கள் நினைவு தினமும் என்னை வழிநடத்துகிறது.
அப்பா என்று அழைத்த குரல்,
இன்று ஏக்கமாய் மாறிவிட்டது
கைபிடித்து நடத்திய நாட்கள்,
கனவுகளாய் நினைவில் நிற்கின்றன.
என் வாழ்வின் துணையே,
உங்களோடு வாழ்ந்த நாட்கள்
இன்று இனிய நினைவுகளாய் மலர்கின்றன.
நீங்கள் இல்லாத வெறுமை வலித்தாலும்,
உங்கள் அன்பு என் இதயத்தில் என்றும் வாழ்கிறது. 🕯️💐
கை கோர்த்து நடந்த பாதைகள்,
கண்முன்னே இன்று நிற்கின்றன
நீங்கள் அருகில் இல்லையென்றாலும்,
உங்கள் நினைவு என்னை விட்டு நீங்கவில்லை
என்றும் என் நெஞ்சில்
வாழும்
என் அன்புக் கணவரே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 20-06-2026 சனிக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் Hotel Marsöl, Süsswinkelgasse 25, 7000 Chur எனும் முகவரியில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
i want to send all my love to this beautiful soul. rest in peace your working collegue at LLB