யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசாந்தி அருச்சுனன் அவர்களின் நன்றி நவிலல்.
ஒற்றைப் பெண்ணென
பொத்தி வளர்த்த ராசாத்தி
மொத்த தலைமுறையையும்
,
பாசத்தால் கட்டிப்போட்ட பேரழகி...
பிறந்த தேசத்தில்
குழந்தையாய் நீ கடந்தாய்
எத்தனையோ இன்னல்கள்
நாடு நாடாய் ஓடியல்லவா
உன் உயிரை தக்க வைத்தாய்
இனிமையாகவும் இலகுவாகவும்
வாழ்ந்து கொண்டிருக்கையில்
இல்லற வாழ்வில் தடம் பதிக்க
காத்திருந்த வேளையில்
காலநிலை எனும் வடிவில்
காலன் போட்ட முடிச்சுக்குள்
கடுகதியில் மூழ்கினதேனோ ???
உனைப் பெற்றவள்,
தனைப் பெற்றவர்களை
இளமையிலே பறிகொடுத்தவள்,
தாயும் தந்தையுமாய்
தன் உடன் பிறப்புகளைத்
தாங்கிப் பிடித்தவள்,
குஞ்சு போல் உனை
பொத்தி அடை காத்தவள்
உன் செய்தியறிந்து
கதிகலங்கிப் போனாளம்மா...
வாழத் தொடங்கையில்
வாழ்க்கை முடிப்பதா ??
கடவுள் என்ன அவ்வளவு
கல் நெஞ்சக்காரனா ???
எம் செல்ல மகராசியே,
சென்று வா தாயே..
செல்வி பிரசாந்தி அருச்சுனன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 45ம் நாள் நினைவஞ்சலி 05-03-2022 சனிக்கிழமை அன்று Canada Kanthaswamy Temple, 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும்.