Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 NOV 1974
இறப்பு 02 JUN 2024
அமரர் பரமேஸ்வரன் வனிதா 1974 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Kloten ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் வனிதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 23-05-2025

எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்

கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு

ஓராண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?

ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உன் பிள்ளைகளாக மட்டுமே நாம்
பிறந்திட வேண்டும் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 04 Jun, 2024