யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரதீப் சிவதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:16/02/2023.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில்
நினைவாய் நிலையாய் என்றும்
எங்களோடு எங்களின்
இறைவனாய்-
என்றும் எங்களை
வழிநடத்த
வணங்குகிறோம். ஆண்டுகள்
போனாலும்
நிமிடங்கள்
போல் உள்ளதய்யா..!!
மறப்பதற்கு மனதிலும்
இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லை
ஐயா உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம்
பலரும்
தவிக்கின்றோம்.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
அரவணைத்து
வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள்
என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து
ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது
நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள்
கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே
இலக்கணம்!
கண்ணுக்குள்
உம்மை வைத்து
காலமெல்லாம்
போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.