யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் பகீரதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
உங்கள் தோற்றம் மறைந்தாலும்!
உங்கள் தூயமுகம் தொலைந்தாலும்!!
தூரம் தொலைவில் நீங்கள் துயில் கொண்டாலும்!!!
உங்கள் தொடர்பை எம்மால்
துண்டிக்க முடியாமல் துவளுகின்றோம் தூயவனே
விதி செய்த சதியால்
நீங்கள் வேறு உலகம் விரைந்தாலும்
உங்கள் விழுதுகள் உம் நினைவால்
விம்மித்தான் அழுகின்றார் இங்கே!!
அன்பில் உறைவிடமாய் ஆறுதலில் தந்தையாக
இன்சொல்லில் இனியவராக வாழ்ந்தவரே
வையகத்தே நீர் எமைப் பிரிந்து சென்றாலும்
வாடுகிறோம் இவ்வையகத்தில் நாமிங்கே!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Heartfelt Condolences. May his soul rest in peace.