Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUN 1935
இறப்பு 16 AUG 2010
அமரர் பூபாலசிங்கம் பாக்கியம்
வயது 75
அமரர் பூபாலசிங்கம் பாக்கியம் 1935 - 2010 மாதகல் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் பாக்கியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி : பூர்வபக்க அட்டமி (01-08-2025)

அம்மா நீ சென்ற கணமும்
அம்மா நீ சொன்ன வார்த்தைகளும்
அம்மா நீ செய்த உன்னதங்களும்
அம்மா நீ தந்த நெறிகளும்
எம் நெஞ்சினில் என்றும் அழியாதம்மா
எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம்

நாளும் விடை தேடுகின்றோம் அம்மா!
எங்கள் வலிகளைத் தாங்க
யாருமே இல்லையம்மா
அப்பா அம்மா இல்லாத
அநாதைகளானோம் அம்மா
அந்த இறைவனே கண்ணீரைப் பரிசாகத் தந்து
மௌனம் காணுகின்றார் அம்மா
அன்பு அம்மாவே!
கொடிய நோய் வடிவில் காலன்
கொன்றுவிட்டானே உங்களை
அன்று மாலைவரை நீங்கள் புரிந்த அன்பு மழை
இன்னும் எம் கண்முன்னே வந்து செல்லுதம்மா.....

நாடு கடந்து வந்து நாம் உங்களைக் கண்டு
நாளும் பொழுதும் மகிழ்ந்து இருந்த கணங்களும்
மருமகளையும், பேரப்பிள்ளைகளையும்
நீ கொஞ்சிக் குலாவிய தருணங்களும்
என்றும் உங்களை நினைவூட்டுகின்றது அம்மா.....

நீங்கள் எனக்காக கட்டிய வீடு
இன்று பாலைவனமாய் கிடக்கின்றது
நீங்கள் இன்று இருந்திருந்தால்
நீங்களாவது அந்த வீட்டில் இருந்திருப்பீர்களே அம்மா...
உயிரைத் தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - .

Photos