யாழ். சங்கானை சேச்றோட்டைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாவும் கொண்டிருந்த பொன்னையா குலநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:30/01/2023.
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டு கடந்து விட்டாலும் நீங்கள்
எப்பொழுதும் எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
குடும்பத்தினர்
அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு, கருணை
அனைத்தையும் தனதாக்கி எமக்காக வாழ்ந்த
எமது குடும்பத்தலைவர் எமது பாசமான அப்பா எமையெல்லாம்
விட்டு மறைந்து ஆண்டு ஒன்று ஆனதே அப்பா.
காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம்,
நீங்கள் எம் மேல் வைத்த பாசம் தான் மாறுமோ?
கண்ணீரை நிறுத்த முடியாமல் தவிக்கிறோம் அப்பா.
பக்கத்தில் வைத்து கடைசிகாலத்தை மனைவி, மக்கள்,
பேரக்குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்து கொண்டாடவிடாமல்
காலன் உங்கள் உயிரை கடுகதியில் பறித்தானே பாதன்.
என்ன செய்வோம் மாண்டார் திரும்ப மீளாரே இன்னும்
ஒரு ஜென்மம் உண்டெனில் எங்களுக்கே அப்பாவாக வர இறைவனை
வேண்ட்டிக்கொள்கிறோம்
உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகள்
அப்பாவைக் காணவில்லை.
என் விரல் பிடித்து நடை பழக்கிய
அந்த அதிசயப்பிறவியை காணவில்லை.
வழக்கமான எனக்கிருந்த இதமான அரவணைப்பைக் காணவில்லை.
என்னை எப்படி அணைத்தாலும் நான் விரும்பும்,
என்னை விரும்பும் அந்தத் தெய்வீக உருவம் போல் எவருமில்லை!
ஓராண்டு எம்மைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்.
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை!
தூக்கத்தில் என் அப்பா போல் ஒன்று என்னை அணைக்கின்றது.
அன்புடன் ஆதரவுடன் பொறுப்புடன் கதைக்கின்றது.
என் தூக்கம் முதலாக விளிக்கும் வரை என்னுடன் இருக்கின்றது.
என்னவென்று புரியவில்லை சொல்லி அழவும் தெரியவில்லை!
எல்லோரும் அழுவார் இறப்பு மாகொடும் இழப்பென்று.
எனக்குத்தானே இது மிகப்பெரும் கொடும் இழப்பு.
தந்தை உயிர் அங்கே இல்லைத்தான்.
அந்தத் தந்தையின் உயிரில் தான் உள்ளம் வாழ்கின்றது!
நீ எங்கிருந்தாலும் உன்னை என்னால் உணர முடியும்.
நீ எங்கு சென்றாலும் உன் குரல் எம் காதில் ஒலித்து கொன்று இருக்கின்றது.
இருட்டிலும் நான் உன்னைப் பார்க்கிறேன்.
ஏனென்றால் நீ என் இதயத்தில் இருக்கிறாய்!
உதிர்ந்து நீ போனாலும் உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!!!
உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!
பிள்ளைகள்
Accept our heart felt condolence, may his soul rest in peace. I am his chankanai cousin.