Clicky

தோற்றம் 18 JUL 1931
மறைவு 06 APR 2020
அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
வயது 88
அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை 1931 - 2020 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரான்ஸ் 13 APR 2020 France

முதலில் குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தங்கள் அனைவரது உறவையும் அன்பையும் பேராதரவையும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த இந்த ஆத்மா இறையடி நோக்கி தன் பயணத்தை தொடங்கியுள்ளது இந்த ஆத்மா சேர வேண்டிய இறையடி நிழலை எந்த இன்னலுமின்றி இனிதே சென்றடைய வேண்டி விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்; முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என வழியனுப்பி வைக்கின்றேன் மானிடர் ஆத்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்பது பரமாத்மாவின் வாக்கு அதன் நிமித்தம் இனிமேலும் இவ் ஆத்மா எடுக்கும் பிறவிகளில் எல்லாவிதமான பேறுகளையும் குறைவின்றி பெற கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! என எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தி ஶ்ரீ பத்திரகாளி அம்மனின் அருட்கடாட்சம் வேண்டுகிறேன் அதுவரை அன்னாரின் ஆத்மா இறையடி நிழலில் இளைப்பாறட்டும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி பாஸ்கரன் குசலா குடும்பம் பிரான்ஸ்