1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
1931 -
2020
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
53
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணை கிழக்கு மயிலப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூங்காவனம் கைலாசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது அம்மா
வான்போல் பரந்த உள்ளம்
முழுமதிபோல் மலர்ந்த திருவதனம்
வாசல் திறந்தவுடன் வா! என்றழைத்து நிற்கும்
உன் வசந்த அழைப்பு எம்மில் ஊசலாடி நிற்கையில்
என்னவென்று மீண்டெழுவோம் எம்தாயே!
அச்சாணி போல் எம்முள் ஆழப்பதிந்து விட்ட
நின் வார்த்தைகளும் நினைவுகளும் எம்முள்
நித்தமும் வந்து எமை வாழ்த்தி நிற்கின்றது!
அம்மா! உன் புன்நகைப்பு என்றென்றும் எம்மனதில்
மின்னலாய் வந்து மிளிர்கிறது என்நாளும்
ஏழேழ் பிறப்பிலும் உன்நினைவில் வாழ்ந்திட
எமை வாழ்த்தி நிற்பீர் எம் கண்மணியே தாரகையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
RIP Grandma, you'll always be loved and remembered