
தோற்றம்
18 JUL 1931
மறைவு
06 APR 2020

அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
1931 -
2020
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
18 JUL 1931 - 06 APR 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : சரவணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் நினைவில் நிற்கின்றீர்கள் அப்பம்மா!
வஞ்சனையற்ற நெஞ்சத்திரையில் உள்ளுணர்வு கோடிட்டுக் காட்டும் கடமைகளைக் காலந்தவறாது ஆக்கிக்கொண்ட பெருவாழ்வினர் அப்பம்மா. அதனால், சக மனிதரை நம்பினார்ளூ நேசித்தார்É பாராட்டினார். குறைவோ நிறைவோ அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்பம்மாவுக்கு இருந்தது.
அப்பம்மா! நீங்கள் இருந்த இடம், நாம் இருக்கும் இடத்திலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால், உங்களை அடிக்கடி காணமுடிவதில்லை. ஆனாலும், நாங்கள் உங்களைக் காணும்போது உங்களுக்கே உரிய புன்னகையுடன் எங்களைக் கட்டித்தழுவுவீர்கள்.
எங்களைவிட்டு இவ்வளவு விரைவாகப் பிரிந்து செல்வீர்கள் என்று நாம் நினைக்கவில்லை. உங்கள் அன்புருவம் மட்டுமே எங்கள் கண்முன் நிழலாடுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் தங்கள் இறுதியாத்திரையில் எங்களால் வரமுடியாமல் இருப்பது மிகுந்த கவலையையே தருகின்றது.
அப்பம்மா! நாங்கள் உங்கள் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளாவிடினும் எங்கள் மனம் அங்கு உங்களுடனேயே இருக்கும்.
அப்பம்மா! உங்களை நினைக்கும்போது எங்கள் உள்ளம் நிறைவாகவே உள்ளது.
பொய்யான உடலை நாம் மெய் என எண்ணிவிடுகின்றோம். அப்பம்மா! புறவாழ்வுக்கான கடமைகளில் தவறாது இருக்க நீங்கள் அகவாழ்வில் பல விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டீர்கள். சுருங்கக்கூறின், தீயனவற்றைப் புதைத்து, நல்லனவற்றை விதைத்துள்ளீர்கள்.
அப்பம்மா! நீங்கள் இருக்கும்போது தெரியாத இடைவெளி, இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. உண்மையான வாழ்க்கை என்று நாம் கருதும் இப்போலி வாழ்க்கையிலிருந்து விலகி, நினைவில்வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள்.
அப்பம்மா! நீங்கள் எப்பொழுதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள்.
அப்பம்மாவின் நினைவில்...
வினேஸ், அஸ்விகா, அயுஸ்
வினேஸ், அஸ்விகா, அயுஸ்
அப்பம்மா!
Cambridge/uk
Write Tribute
Summary
-
சரவணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 12 Apr, 2020
நன்றி நவிலல்
Wed, 06 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 27 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 09 Apr, 2025
RIP Grandma, you'll always be loved and remembered