இழந்தோம் தந்தை வழி ஓர் உறவை தொலைத்தோம் ஆசை மாமி என்ற வார்த்தை இழந்தவை இவை இரண்டுமா இல்லை அவர்கள் அண்ணனின் (எம் தந்தை) இறப்புச் செய்தி கேட்டு அழுது தீர்த்த கண்கள் இழந்தோம் அதே அண்ணனின் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் தந்த கரங்கள் இழந்தோம் தந்தையின் இழப்பில் வாடிய எம்மை ஓடோடி வந்து உதவிய நன்றிக்கடன் இழந்தோம் இயலாமையிலும் எம் தந்தையின் இறுதிக் கிரியையில் கலந்து கொண்ட பாசம் இழந்தோம் இத்தனையிலும் இன்று சோதனையில் உள்ளோம் முடிந்தாலும் வந்து இன்று உங்கள் முகம் காண முடியாத வேதனையில் உள்ளோம் மரண வீட்டில் கலந்துக்க முடியாத சோகமான சூழ்நிலையில் உள்ளோம் கொரோனா ரோட்டில் இறங்க விடாத விபரீத அவலநிலையில் உள்ளோம் மாமி உங்கள் மறைவுத் தேதி தொட்டு இன்று வரை மனக் கவலையில் உள்ளோம் தங்கள் பிரிவுச் செய்தி அறிந்தும் இறுதி வரை வர முடியாமல் சிரம் தாழ்ந்து உள்ளோம் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஐயனாரை வேண்டுகின்றோம் தங்கள் பிரிவால் வாடும் அண்ணன் தியாகராசா குடும்பம் (சிவா)
RIP Grandma, you'll always be loved and remembered