Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 FEB 1947
இறப்பு 01 OCT 2023
அமரர் பூமணி தம்பிராசா 1947 - 2023 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மட்டுவில் தெற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பு மொறட்டுவ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தம்பிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்  குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்