
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசுந்தரம் சிவதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டெத்தனை ஆனாலும்
மாண்டவர் வருவதில்லை
ஆனாலும் அன்னை இவளிருக்க
சேய் எனை முந்திப் போனதேன்...?
ஆண்டொன்று ஆனதய்யா
ஆறவில்லை உன் பிரிவு!!
மீளாத்துயர் தந்து எமை ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு கன தூரம் சென்றவனே
கலையாத நினைவுகளுடன் உன் சகோதரர்கள்
வாடுகின்றார் அறிவாயோ நீ அதனை..?
அழகான உன் சிரிப்பு இன்னும்
நினைவில் நீங்கவில்லை
நொடிப்பொழுதில் எமை வருந்த விட்டு
கடவுள் உனை அவசரமாய் அழைத்தாலும்
எங்கள் இதயப்பூக்கள் என்றும் உனக்காக..!
ஓராண்டு அல்ல ஆண்டுகள் பல கடந்தாலும்
எம் மூச்சு வாழும் வரை உன் நினைவும்
கூடவே வாழும் நீ விட்டுச்சென்ற
நினைவோடு வாழ்ந்திருப்போம்
உன் ஆத்ம சாந்திக்காக வேண்டும்
அம்மா மற்றும் சகோதரர்கள்...!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் பூபாலசுந்தரம் சிவதாசன் அண்ணாவின் நினைவஞ்சலி பார்த்தேன்.மிகவும் கவலையாக உணர்ந்தோம்.இன்றைக்கு தாங்கமுடியாத வேதனையை தருவது...