யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு சென்றாலும் ஓரவிழி காயாது
தீராத ஏக்கமுடன் துடிக்கிறது எம் இதயம்
புன்னகை பூத்த முகம் பூரித்த வார்த்தைகளும்
நேரிடையாய் கண்டிடுவோம் என்றிருந்த வேளையிலே
கனவாகிப் போனதந்தக் காலைப்பொழுததுவே
தரணியிலே தவிக்கவிட்டு தனிமையிலே சென்றுவிட்டீர்
நடந்ததெல்லாம் கனவெனவே மறுக்கிறது எம்மனமும்
தலைவனின்றி இல்லாளும் தந்தையின்றி பிள்ளைகளும்
உன்னை இழந்த உடன்பிறப்புகளும் உருகித் தவிக்கின்றோம்
ஆற்றாத எம் வலியை ஆற்றுவிக்க வார்த்தையில்லை
பற்றாகப் பற்றியது உங்கள் ஆத்மா அவன் பாதம்
உங்கள் ஆத்மா இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாதாரவிந்தங்களில்
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர்
இது என்ன அதிர்ச்சி! என்ன கொடுமை! அன்பு, தாழ்மை, பணிவு, கடும் உழைப்பு என்றால் அது சுதா தான், என்று சொல்லும் அளவிற்கு நற்குணம் கொண்ட சுதா, ஏன் இந்த அவசரம். எண்பதுகளில் உங்கள் வீட்டுக்கு வரும்போது...