2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம்
1940 -
2021
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இந்த உலகை விட்டு சென்று
இரண்டு வருடம் ஓடி விட்டது அப்பா
ஆயிரம் தெய்வங்கள் கண்முன்னே தோன்றும்- நீங்கள்
எம்மில் காட்டும் அன்பில்
தெய்வங்கள் ஏதும் இல்லையென்றானது- நீங்கள்
எம்மை விட்டுச் சென்ற பின்னே
இதுவரை எம்மை வழிநடத்தியவர் இன்று- பாதி
வழியில் விட்டுச் சென்று - எமை
திக்கற்று திணறவிட்டதேனோ
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயர்
மறுபிறவி உண்மை என்றால்- நீங்கள்
மறுபடியும் பிறக்க வேண்டும்
மனமெல்லாம் ஏங்குதப்பா- எங்கள்
நினைவெல்லாம் நீங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
R I P