
யாழ். தையிட்டி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், தையிட்டி மூர்த்திவீதியை வசிப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை பவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம் மாறாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு அழியாது
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி்விட்டு மீளாத்துயில்
கொண்டாய் எங்கள் அப்பா
அப்பா அப்பா என்று எங்கள் நா அழுகிறது ஆனாலும்
நீங்கள் வரவில்லையே அப்பா புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா விழிநீர் சொரிகிறது
அப்பா வேதனையில் துடிக்கின்றோம் பாசமிகு அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று தெரிந்த பின்பு
நெஞ்சு கதறுகிறது அப்பா நேசமுடன் உம்மை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால் எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா
அன்புக்கு இலக்கணமாய் பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் எம்மை
அரவணைத்து அச்சாணியாய்
தாங்கிய எங்கள் அன்பு தெய்வமே
நாம் கூடி வாழ்ந்த காலம்
தேடி இனி வருமா
இது கனவா அல்ல
நிஜமா என்று தவிக்கின்றோம் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
may his soul rest in peace,heart felt condolences to the family, ,thyiddy.